தமிழகத்தில் 14 ஆயிரத்து 829 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஐந்து வகுப்புகளையும் சேர்த்து, 30க்கும் குறைவான மாணவர்கள் தான் படிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதிலும், 6,635ல், 20க்கும் குறைவான மாணவர்களும், 3,027ல் 10க்கும் குறைவான மாணவர்களும் தான் படிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இந்த பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும்.
இதில், வட மாவட்ட பள்ளிகளே அதிகம். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலுார், திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், 30க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,062. தொடக்கப் பள்ளிகளில், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எப்படி பாடம் நடத்த முடியும்?
அரசு பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள் ளிக் கல்வித் துறைக்கான நிதியை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.