மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்...தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது....மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு(அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்...இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒரு தொகுதிக்கு தலா 2 நாட்கள் என 4 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய்  பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் பேசுவதற்காக மதுராந்தகம், தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.