பத்திரிகையாளர்களின் தர்மம் படுகுழியில் விழுந்து சில தலைமுறைகள் கடந்து விட்டது ! சமுதாய அக்கறை கொண்ட பத்திரிகையாளர்களை அத்தி பூப்பது போல் அபூர்வமாகத்தான் காணமுடிகிறது இன்று ! தேவையே இல்லாத பிரச்சனைகளை தலை மேல் வாரிப் போட்டுக் கொண்டு பிறகு அது விபரீதத்தில் போய் முடியும் பொழுது விழி பிதுங்கி நிற்பது அவர்களை வாடிக்கையாகிவிட்டது !
நாட்டையே உலுக்கும் எத்தனையோ நாச சக்திகள் இன்னும் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது ! ஆனால் பெரும்பாலான மீடியாக்கள் மலிவான பிரச்சனைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு , பரபரப்பை தேடிக் கொள்கின்றன !
1980 களில் வெறும் 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகளே சமுதாயத்திற்கு செய்திகளை சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தன ! 90 களின் இறுதியில் தான்
தொலைக்காட்சிகள் துறையில் அடியெடுத்து வைக்க தொடங்கியது ! அன்று அரசின் அத்தனை துறைகளுடனும் அத்தனை இணக்கமாக இருந்திருக்கின்றன பத்திரிகைகள் !
தடுக்கி விழும்போது அரசை குட்டவும் செய்யும் , நல்ல செயல்களை அரங்கேற்றும் போது பாராட்டி கை தட்டவும் செய்யும் பத்திரிகைகள் ! ஆனால் இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் புற்றீச்சல் போல் புறப்பட்டு கொண்டிருக்கின்றன பத்திரிகைகளும் , சமூக வலைத்தளங்களும் , you tube மேடைகளும் !
இப்படி போலிகளின் ஆக்கிரமிப்பு பத்திரிகை துறையில் ஒரு புறம் படையெடுக்க , தரமான மீடியாக்களும் பல தருணங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றன ! இரு தலைமுறைக்கு முன்னால்
" தமிழகப் பெண்களின் தாலி " குறித்து அந்த டிவி நடத்திய
டிபேட் பெரும் பரபரப்புள்ளாகியது
இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக சொல்லி போராட்டம் , மறியல் என்று மாநகரை உலுக்கி இருக்கிறது ! பெண்களின் மாங்கல்ய பெருமையை பட்டிமன்றத்தில் பகடை பொருளாக வைத்து , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு சிவப்பு கம்பளம் விரித்திருந்தது ஒரு தரமான மீடியா !
அடிதடி , தள்ளுமுள்ளு , காமரா உடைப்பு , கேமரா மேன் படுகாயம் தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு என்று தேசிய அளவில் பரபரப்பான செய்தியானது அன்று ! அந்த டிவி சேனல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர் !
இது போன்ற தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பது தேவையே இல்லாத ஒன்று ! ! எனவே தான் தங்களின் தாலியை சர்ச்சையாக்கியவர்களின் மீது எதிர்ப்பை தெரிவிக்க , இப்படி பட்டாசை கொளுத்தி போட்டு இருக்கிறார்கள் இல்லத்தரசிகள் !
இதுவே ஒரு முஸ்லீமை இழிவுபடுத்தும் வகையில்" ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு சுன்னத் என்பது தேவையா " என்று சொல்லிப் பார்க்கட்டும் , அடுத்த ஐந்து நிமிடத்தில் RDX குண்டுகள் வெடித்து சிதறி இருக்கும் தமிழகத்தில் என்றனர் சமூக ஆர்வலர்கள் !
IIT என்பது நாட்டின் தலைசிறந்த அறிவு பட்டறை ! அன்று IIT யின் பேராசிரியர் ஒருவர் ஒரு பத்திரிகையின் போட்டோகிராபரை அடித்துவிட்டார் என்று அபாண்டமாக பழி போட்டு கேம்பஸை கதி கலக்கி , அவரை மண்டியிட வைத்திருக்கிறார்கள் !
செய்தி வெளியிடும் தரமான சேனல்கள் , தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்கின்றனர் மகளிர் கூட்டமைப்பினர் ! என்ன செய்வது ? போட்டி சேனல்களை புறந்தள்ளி தான் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது இன்று ! குற்றம் நடந்த அடுத்த நொடியே காவல்துறைக்கு செய்தி சேரும் முன்பே செய்தியாளருக்கு தான் முதல் தகவல் கொடுக்கப்படுகிறது !
மீடியாக்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது ! வெறும் பரபரபரப்புக்காகவும் , சர்க்குலேஷனில் சாகசத்தை காட்டவும் , TRP ரேட்டை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் , நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடிப்பதற்காகவும் பத்திரிகைகள் தங்கள் தர்மத்தை மீறி தரம் தாழ்ந்து சென்று கொண்டு விடக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது !
பொதுவாகவே போலீசாரின் பெர்ஃபார்மன்ஸ்சை கேவலமாக கமெண்ட் அடிக்கும் பெரிய பேனர் பத்திரிகைகளின் கட்டிங்கை கவனத்தோடு சேகரித்து வைப்பார்கள் ஐஎஸ் காரர்கள் ! கைகளில் என்றாவது ஒருநாள் சிக்காம போய் விடுவார்களா என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள் உயர் அதிகாரிகள் !
ஆனால் ஏதாவது ஒரு வழியில் இவர்களது வலையில் வலி வந்து விழுந்து விடுவார்கள் பத்திரிகையாளர்கள் ! அடுத்த நொடியே IPC செக்க்ஷன்கள் அதிரடியில் வேகம் பிடிக்கும் ! நக்கீரன் , தினமலர் , தி இந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பல பத்திரிகைகளையும் பதம் பார்த்திருகிறது போலீஸ் !
2021 இல் கடற்கரை சாலையில் திமுக நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது ! தினமலர் , இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை போலீசுக்கு எதிராக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டிருந்த காலம் அது ! கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தினமலரின் நிருபரையும் ( முருகன் ) ஆஜ் தக் டிவியின் பெண் நிருபரையும் சுட்டிக்காட்டி கண் சிமிட்டினார் ஒரு போலீஸ் உயர் அதிகாரி !
அடுத்த நொடியே தடியோடு ஓடிவந்த TSP போலீசார் இரண்டு செய்தியாளர்களையும் ரவுண்டு கட்டி அடிக்க தொடங்கினார்கள் ! பெண் நிருபரின் கன்ணம் பூரி மாதிரி வீங்கிவிட்டது ! தினமணி நிருபரின் முதுகு தோல் உரிந்து விட்டது ! கமிஷனரிடம் (முத்துகரு ப்பன் ) காட்டி முறையிட்டபோது , அய்யய்யோ சாரி ! தெரியாம நடந்து போச்சு ! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே ஆழ்ந்த அனுதாபத்தை அள்ளி தெளித்தார் !
2000 ஆண்டின் துவக்கத்திலிருந்தே கமிஷ்னருடன் பல்வேறு தருணங்களில் கருத்து வேறுபாடு கொண்டு, காரசாரமான மோதலை வளர்த்துக் கொண்டனர் நிருபர்கள் ! விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் சில கமிஷனர்கள் நிருபர்களை விரோதிகளாகவே பார்க்கத் தொடங்கினர் ! இரு தரப்பினர்களுக்கும் இடையே இருந்த இதய பூர்வமாக உறவு எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்தது !
எழுத்தறிவித்தவன் இறைவன் எனப்படும் " கல்வித் துறையிலும்" காமுகர்கள் ! கடவுளுக்கு நிகராக மக்கள் கையெடுத்து கும்பிடும் " "மருத்துவத்துறையிலும் ", கருப்பாடுகள் " கண்ணீர் சிந்தும் மக்களின் கடைசி நம்பிக்கையான "நீதித்துறையிலும் " குமாரசாமி கள் ! ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான " பத்திரிகை துறையிலும் " புல்லுருவிகள் என்று மூன்று புனிதமான துறைகளுமே என்று புதைக் குழியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது !
கடந்த தேர்தலில் கணிசமான மீடியாக்கள் காசுக்கு ஆசைப்பட்டு தன் கண்ணியத்தை இழந்திருக்கிறது ! தங்களின் தொழில் தர்மத்தையும் தொலைத்திருக்கிறது !
உலகம் இதிலே அடங்குது ! உண்மையும் பொய்யும் விளங்குது ! கலகம் வருது தீருது ! அச்சு கலையால் உலகம் மாறுது !
என்று பத்திரிகை குறித்து கவிஞரின் பாடல்லொன்று
Radio FM மில்லிருந்து தென்றலாய் வெளிப்பட்டு நம்மை தாலாட்டியது Coincidence !