தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாச்சியார்புரம் பகுதியில் அமைந்துள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் இருப்பதாகக் கூறப்படுவது அப்பகுதி மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.பொதுமக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய இந்தத் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? அப்பகுதி மக்களுக்கு உரிய மருத்துவச் சேவைகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.மேலும், சுகாதார நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும் வருவாய்த் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து, சுகாதார நிலையத்தின் தற்போதைய நிலை, அதன் செயல்பாட்டுத் தடை மற்றும் இடத்தின் உரிமை தொடர்பான விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் எனச் சமூகஆர்வலர்களும்பொதுமக்களும்வலியுறுத்துகின்றனர்.சுகாதார நிலைய இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.