தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம்:

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் சுப்பிரமணியபுரத்தில் அருள்மிகு வெற்றி விநாயகர் தசரா குழு சார்பில் தசரா திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இதையொட்டி, இசக்கியம்மன் கோவிலில் இருந்து இரண்டு பக்தர்கள் அலகு குத்தியும், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் நடைபெற்றபோது பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். விழாவில் கோரம்பள்ளம் சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தகோடிகள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழா பக்தி உணர்வுடனும், சிறப்புடனும் நடைபெற்றது.