தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , ஆர்த்தி திருமண மண்டபத்தில் வைத்து ஐம்பெரும் விழா ,வ உ சி யின் 155 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கோலப் போட்டி, வ. உ .சி .அவர்களை பற்றி பேச்சுப்போட்டி, தெய்வ மந்திரங்கள் சொல்லும் போட்டி, மாணவ மாணவியருக்கு பரிசு வழங்குதல், போன்றவைகள் நடைபெற்றன, இவ்விழா P. பாரதி சங்கர், சைவ வேளாளர் சங்கம் தலைவர் அவர்களின் தலைமையிலும் S. கோமதி சங்கரலிங்கம் பிள்ளை, S. கதிரேசன் துணை ஆட்சியர் (ஓய்வு), K.M. மேனன் ,P. செல்வகிருஷ்ணன், S.ராமசாமி அவர்கள் முன்னிலையில், இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசீய ஞானபரமாச்சாரியார் சுவாமிகள், வரவேற்புரை R. பொன் பாலசுப்பிரமணியன், நன்றி உரை ஆ. முருகன், சிறப்பு விருந்தினராக S. பாலதண்டபாணி அவர்கள் தாப்பாதி, மற்றும் கமிட்டியாளர்கள் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், ஒன்றாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.