Korampallam, Thoothukudi District:
Residents of Samiyar Street in Srini Nagar—an area falling under the Korampallam Panchayat in Thoothukudi district—are reportedly facing significant hardships due to poor sanitary conditions.
The local population is increasingly anxious due to a rise in mosquitoes and the presence of venomous creatures. There is a growing fear among the residents that these conditions could lead to the outbreak of diseases such as dengue and malaria.
Social activists are urging the Korampallam Panchayat administration and the relevant health department officials to conduct an immediate inspection in the interest of public well-being.
Furthermore, there have been calls for urgent action, including intensifying mosquito-eradication efforts, clearing accumulated waste and overgrown vegetation, and implementing comprehensive public health safety measures.
Will the authorities take action?
The residents and social activists are now looking to the Korampallam Panchayat administration and the concerned authorities to put an end to these sanitary issues and take immediate steps to prevent the spread of diseases like dengue and malaria.
Reporter: Balasubramaniam
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம்:
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீனி நகர் பகுதியில் உள்ள சாமியார் தெருவில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகளால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷச் சந்துகள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற கவலை அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோரம்பள்ளம் ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துதல், தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் புதர்களை அகற்றுதல், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஸ்ரீனி நகர் சாமியார் தெருவில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்க கோரம்பள்ளம் ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் பாலசுப்பிரமணியம்