போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகத் தொடர் வேட்டை… மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் IPS அவர்களின் நேரடி உத்தரவு மற்றும் தீவிர கண்காணிப்பின் கீழ், மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்!பழனி உட்கோட்டம், தாலுகா காவல் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளிமந்தையத்திலும் அதிரடி நடவடிக்கை!கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.மாவட்டம் முழுவதும் தொடரும் போதைப்பொருள் தடுப்பு வேட்டை!கஞ்சா விற்பனை, கடத்தல் மற்றும்போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமையில் உறுதி… நடவடிக்கையில் தீவிரம்… இலக்கில் சமரசமில்லை!போதைப்பொருள் ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் தொடரட்டும்!