தூத்துக்குடி கே .டி .சி நகர் ,ஹவுசிங் போர்டு பகுதியில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் வீரமூர்த்தி வயது( 70 )என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ,14 பவுன் தங்க நகைகள் ,750 கிராம் வெள்ளி நகைகள், ரூபாய் 80,000 பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை கொள்ளை பரமன் குறிச்சியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றதை அறிந்த கொள்ளையர்கள் கைவரிசை ,தகவலறிந்த போலீசார் விசாரணை .கே. டி .சி நகர் ,ஹவுசிங் போர்டில் இருந்து சிப்காட் காவல் நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இருப்பதால் போலீசார் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கு சாதமாக உள்ளதாகும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.