ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை கோபி வருவாய் கோட்டாட்சியர் ந. சிந்துஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார் இப்பேரணியில் கோபி கலை அறிவியல் கல்லூரி NCC மற்றும் NSS மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர் இப்பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.