தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வர உள்ளனர். பக்தர்கள் பலர் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பக்தர்களை புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி சிலர் தொந்தரவு செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், முத்துகிருஷ்ணன், மண்டல தலைவர் பாலமுருகன் மற்றும் குலசை முத்தாரம்மன் தசரா குழு பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விடுத்தனர் தசரா திருவிழா நடைபெறும் காலங்களில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறை உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கலந்து கொண்டவர்கள்: இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் மண்டல தலைவர் பாலமுருகன் குலசை முத்தாரம்மன் தசரா குழு பொறுப்பாளர்கள்