In the Rameswaram Palk Strait sea area, the sea border with Sri Lanka is within a very narrow stretch of water. Since fiber boats are very fast, they can quickly cross the international boundary. Because of this, and to prevent an increase in Sri Lankan Navy arrests, fiber boats are banned in Rameswaram for security reasons.In this situation, keeping in mind factors like the safety of fiber boats, reduced boat damage, and lower maintenance, the Fisheries Department has been asked to remove the restriction and provide government-issued fishing permission tokens and subsidized diesel to the fiber boats at Rameswaram port, and they have been continuously urging the government to do so.
Amidst this, to press these demands, all members of the Rameswaram Fiberglass Fishing Boats Association participated in a protest in front of the Rameswaram Fisheries Department Token Office.They raised protests against the fisheries department for not providing subsidized diesel and fishing permission tokens to fiber boats. They also insisted that the government should take immediate action and grant proper permissions to fiber boats. More than a hundred people, including fishermen and workers from all the fiber fishing boat associations, participated in this.
Regarding this, fishermen's representative Karl Marx said, 'In areas like Pak Neerinaai sea region, Pudhukottai district, and Jagathapattinam, fishermen use fiber fishing boats for their fishing activities. Just like the government provides subsidized diesel and fishing permission tokens to other boats, it should also provide the same to the fiber boats at the Rameswaram port.'He stated that the government should provide proper compensation to the fisher boats seized in Sri Lanka. The Tamil Nadu government should take appropriate action to ensure this. Otherwise, a road blockade protest will be held at Thangachimadam on October 2nd.
ராமேசுவரம் பாக் நீரிணை கடல் பகுதியில் இலங்கைக்கு மிக அருகில் கடல் எல்லை மிக குறுகிய கடற்பரப்புக்குள் உள்ளது. பைபர் படகுகள் அதிவேகம் கொண்டவை என்பதால், அவை மிக விரைவாக சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பல்வேறு பாதுகாப்பு கருதி ராமேசுவரத்தில் பைபர் படகுக்கு தடை உள்ளது.இந்நிலையில், பைபர் படகுகளின் பாதுகாப்பு, படகு சேதம் குறைவு, குறைவான பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களை மீன்வளத்துறை கருத்தில் கொண்டு தடையை நீக்கி ராமேசுவரம் துறைமுகத்தில் உள்ள பைபர் படகுகளுக்கு அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி டோக்கன் மற்றும் மானிய டீசல் வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் அனைத்து பைபர் விசைப்படகு மீனவ சங்கத்தினர் சார்பில் ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பைபர் படகுகளுக்கு மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்காத மீன்வளத் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பைபர் படகுகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் அனைத்து பைபர் விசைப்படகு சங்கத்தின் மீனவர்கள், தொழிலாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மீனவப் பிரதிநிதி கார்ல் மார்க்ஸ் கூறியதாவது, “பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பைபர் விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். அந்தப் படகுகளுக்கு அரசு மானிய டீசல் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவது போல் ராமேசுவரம் துறைமுகத்தில் உள்ள பைபர் படகுகளுக்கும் வழங்க வேண்டும்.இலங்கையில் பிடிபட்டுள்ள பைபர் படகுகளுக்கு அரசு உரிய மானியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.