ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், இலிப்பிள்ளி கிராமத்தில் சாய்பாபா கோவில் அருகில் பனை விதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு பனை விதை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார் உடன் அந்தியூர் வட்டாட்சியர்  சக்திவேல், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையினர், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் எடுத்துரைத்ததுடன், அனைவரும் தங்கள் பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற பனை விதை நடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.