மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் புதுப்பட்டி கம்மா, அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது,அப்பொழுது ஆட்டோவில் வந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் ஆட்டோவை வேகமாக ஓட்டினர். அதை கண்ட போலீசார் விரைவாக சென்று அவரை மடக்கி பிடித்தனர் ஆட்டோவை சோதனையிட்டனர், அதிலிருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பதுக்க பட்டிருந்தது .போலீஸ் விசாரணை யில் ஜெய்ஹிந்துபுரம் பிரேம்குமார், திருநெல்வேலி மேலப்பாளையம் கிருஸ்துமதிஅழகன், முத்துப்பட்டி சேர்ந்த பையா கார்த்திக் ,திருநெல்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரன், என தெரியவந்தது இந்த கும்பல் ஒரே எண்ணை கொண்ட 500 ரூபாய் நோட்டு அச்சடித்து மக்களிடம் புழக்கத்தில் விட திட்டமிட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்,பின்பு அவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.