குரும்பூர்:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியைச் சேர்ந்த பிரஜித் (24) என்பவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மகன் மற்றும் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் மற்றொரு நபர் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.தாக்குதலுக்குப் பின்னர் பிரஜித் நடுரோட்டில் ஓடவிடப்பட்டதாகவும், காயமடைந்த அவர் தற்போது ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த சம்பவம் தொடர்பாக பிரஜித்தின் வழக்கறிஞர் சுடலைமணி, எஸ்.பி.பி.ஐ.டி. அதிகாரியிடம் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.