கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி சாய்பாபா கோவில் அருகே, அரசு பேருந்து மோதி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குல வணிகர்புரத்தைச் சேர்ந்த ,ராஜகோபால் வயது 60 என்பவர் பரிதாபமாக பலியானார். இறந்த நபர் ராஜகோபால் மேற்கண்ட இடத்தில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பேங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு கயத்தாரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் தனது TN72 CE 20 67 XL இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார் பின்னர் உயிரிழந்தவரின் உடல் ரோசி ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.