சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு மற்றும் மனிதா அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் 1000 மரக்கன்று மற்றும் பனை விதை நடும் திருவிழா, திருத்தணி வட்டம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இஸ்லாம் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மனிதா அறக்கட்டளையின் நிறுவனர் முஹம்மத் தௌஷிப், 6 கோடி பனை விதை நடும் திட்டம் - திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தலைமை தாங்கி, மரக்கன்றுகளையும் பனை விதைகளையும் நட்டு விழாவினை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ரகுவரன் வீரகநல்லூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலை வகித்தார்.மேலும், சிறப்பு விருந்தினராக ஊராட்சி செயலாளர் எம். கே. கார்த்திக் கலந்து கொண்டு, மரங்களை வளர்ப்பதன் அவசியத்தையும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தையும் குறித்து சிறப்புரையாற்றினார்.
இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இத்தகைய நற்பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும் பனை விதைகளையும் நட்டனர்.
விழாவிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தமிம் அன்சாரி, சுஹேல் மற்றும் வாடேபீர் ஆகியோர் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர் இயற்கை சமநிலையைப் பேணவும், புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரிய முயற்சிக்கு அப்பகுதி மக்கள் அனைவரும் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.