போச்சம்பள்ளி எம்.ஜி.எம். மெட்ரிக் பள்ளியில் விமரிசையாக நடந்த 12-வது ஆண்டு விளையாட்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள எம்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின 12-வது ஆண்டு விளையாட்டுப் போட்டி உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனரும் தொழிலதிபருமான ஜி.பி. பன்னீர் அறிவுருத்தலின் பேரில் தாளாளர் மாதவி பன்னீர், சி.இ.ஓ. செந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குநர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் வனிதாமணி கலந்துகொண்டு பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் சுடர் போன்ற விளையாட்டுத் தீபத்தைப் பள்ளியின் விளையாட்டுத் தலைவர்கள் மைதானத்தைச் சுற்றி ஏந்தி வந்து முறைப்படி சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகளுடன் சேர்த்து, மாணவ-மாணவிகளின் உடற்பயிற்சி திறன்கள், மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், கைப்பந்து,கோகோ, 500 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், டென்னிஸ், செஸ் போன்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தின.

விழாவின் நிறைவாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும், ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்து விளங்கியவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்கள், சான்றிதறிகள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, பள்ளி இவ்விழாவை பள்ளி பள்ளி முதல்வர் ஹசினாபேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.